தெஹ்ரான், 21 ஜூன் 2026 : இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு மீண்டும் தடை விதித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை அந்நாட்டின் மத்திய இராணுவ கட்டளைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டிருந்த போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






