என் தமிழ்

முக்கிய முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் – பிரதமர்

20 ஜூன் 2026 : மலேசியா உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்கான முன்னணி இலக்காகத் தொடர்ந்து திகழ வேண்டுமெனில், முதலீட்டு ஒப்புதல் நடைமுறைகளையும் மூலோபாயத் திட்டங்களின் செயல்பாட்டையும் விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

முதலீட்டு அனுமதிகளில் தேவையற்ற அதிகார நடைமுறைகளைக் குறைத்து, நிர்வாகத் திறனை மேம்படுத்துவது அவசியம் என்றும், வேகமாக வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த அணுகுமுறை முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்தர முதலீடுகளை ஈர்ப்பதில் நீண்டகால நடைமுறைகளைப் பின்பற்றுவது போதுமானதல்ல என்றும், தெளிவான கொள்கைகள், திறமையான நிர்வாகம் மற்றும் விரைவான சேவை வழங்கல் ஆகியவை நாட்டின் போட்டித்திறனை மேலும் உயர்த்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பத்து கவானில் நடைபெற்ற MKS Instruments Malaysia Sdn. Bhd. நிறுவனத்தின் புதிய வளாக திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், தற்போதைய சேவை வழங்கல் முறையில் இன்னும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலையைப் போதுமானதாகக் கருதும் மனப்போக்கைத் தவிர்த்து, விரைவான மற்றும் திறமையான நிர்வாகத்தின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top