முவார், 16 ஜூன் 2026 : ஜொகூரின் முவார் பகுதியில் உள்ள மக்களுடன் நேரடியாகச் சந்தித்து உரையாடும் நிகழ்வின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முவார் சூப் ஹவுஸில் உள்ளூர் மக்களுடன் பிற்பகல் தேநீர் அருந்தினார். அதற்கு முன்னதாக, லேகா கடற்கரை பகுதியில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்ட பிரதமர், பின்னர் முவாரில் உள்ள சுல்தான் இப்ராஹிம் ஜாமெக் பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினார்.
பின்னர் முவார் சூப் ஹவுஸுக்குச் சென்ற அவர், அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் பகிர்வுகளையும் கேட்டறிந்தார். முவார் மக்களிடையே இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி சூப்பிற்கு பெயர் பெற்ற இடமாக முவார் சூப் ஹவுஸ் விளங்குவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.



மக்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அன்றாட அனுபவங்களை அறிந்து கொள்வது அரசாங்கத்தின் மக்கள் மைய அணுகுமுறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு, பிரதமருக்கும் உள்ளூர் சமூகத்தினருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியதுடன், மக்களின் அன்பான வரவேற்பையும் வெளிப்படுத்தியது.






