இது நமது மண் என்கின்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்க வேண்டும்.
நாடு மலாயாவிலிருந்து மலேசியாவாக உருவான 16 செப்டம்பர் நாள்தான் இந்த மலேசிய நாள். ஆரம்பத்தில் சபா, சரவாக் மக்கள் மட்டுமே கொண்டாடி வந்த இந்த நாளை நமது பிரதமர் 2010ஆம் ஆண்டு தொடங்கி பொது விடுமுறையாக அறிவித்து நாடு தளுவிய நிலையில் கொண்டாட வழி செய்தார்.
இந்த நாளில் நாம் அனைவரும் முக்கியமாக நினைவு கூற வேண்டிய ஒன்று நாம் அனைவரும் மலேசியர்கள். இனம் மொழி மதம் கடந்து வாழும் இந்த நாடு, நமது நாடு என்கின்ற எண்ணம் நாம் அனைவருக்கும் மேலோங்க வேண்டும். ஆய்வின் படி மலேசியர்களிடையே முன்பை காட்டிலும் இப்பொழுது மலேசியர்கள் எனும் எண்ணம் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் வழங்கப்பட்டாலும் இது நாம் பிறந்த மண். வாழ்வதற்கு சொந்த நாடு இன்றி பலர் தவிக்கையில் நம்மை அரவணைத்து மலேசியர் எனும் அங்கீகாரம் வழங்கி சகல வாய்ப்புக்களையும் கொடுக்கும் நமது நாட்டை நாம் என்றும் பெருமையுடன் பார்க்கவேண்டும். அதுதான் ஒவ்வொரு மலேசியரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பழைய பாடல் சொல்வது போல் நாடென செய்தது எனக்கு என்று கேட்காமல் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்பது கேட்பதே சிறப்பு.
ஆக இந்நாள் மலேசியர்கள் நாம் அனைவரிடமும் ஒற்றுமை வலுப்பெற்று இப்பொழுது இருந்து வரும் கோபதாபங்கள் நீங்கி, அனைவரும் சுபிட்சமாக வாழ வகை செய்ய இறைவனை வேண்டுகிறேன். நன்றி
இவ்வாறு….மலேசிய தினமான இன்று தமது 38வது பிறந்த நாளையும் கொண்டாடும் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் 16/09/2014 வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.