பட்டர்வொர்த், 03 ஜூன் 2026 : பினாங்கு மாநிலத்தில் உள்ள எஸ்.ஜே.கே.டி. மாக் மாண்டின் பள்ளியைச் சேர்ந்த 3 கம்பார் வகுப்பு மாணவி மிரிதினி பிரகாஷ், 10வது கிட்ஸ் காட் டேலண்ட் மலேசியா 2026 போட்டியின் 9 முதல் 11 வயது பிரிவு கதை சொல்லல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
மாணவியின் சிறப்பான கதை சொல்லும் திறன் மற்றும் மேடை நிகழ்த்தல் திறமை நடுவர்களின் பாராட்டைப் பெற்றதுடன், இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கன் காட் டேலண்ட் சீசன் 21 ஆன்லைன் தேர்வில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றுள்ளார்.
மேலும், 2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய நட்சத்திர விருது விழாவில் சிறப்பு விருது பெறுவதற்கான அழைப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிரிதினி பிரகாஷின் இந்த சாதனை பள்ளிக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவியின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று உயர்வடைய வேண்டும் என எஸ்.ஜே.கே.டி. மாக் மாண்டின் பள்ளி குடும்பத்தினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.






