என் தமிழ்

அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் பினாங்கு சர்வதேச யோகா தினம் 2026

பினாங்கு, 26 மே 2026 : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு “Penang International Yoga Day 2026” எனும் சிறப்பு நிகழ்ச்சி, வரும் ஜூன் 20ஆம் தேதி பினாங்கு யூத் பார்க்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

“அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வை, மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளை இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்கிறது. இதனுடன், பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு, மஜ்லிஸ் பந்தராயா புலாவ் பினாங்கு (MBPP) மற்றும் Perfect Life Yoga Asia Academy ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்..

நிகழ்ச்சி அதிகாலை 5.15 மணிக்கு பதிவு மற்றும் டி-ஷர்ட் வழங்கலுடன் தொடங்கும். காலை 6 மணிக்கு யோகா தின நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் உடற்பயிற்சி அமர்வுகள், சூர்ய நமஸ்காரம், யோகா உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய மற்றும் யோகா சார்ந்த செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.

பங்கேற்பாளர்கள் தங்களது சொந்த யோகா விரிப்பை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நிறைவில் இலகு உணவுகள் வழங்கப்படுவதுடன், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்விடத்தின் பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உடல், மனம் மற்றும் ஆன்மிக நலனை மேம்படுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய:-
https://forms.gle/Wz6PnSeZVNhKrGrx7

விவரங்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும்:
016-482 2879 / 016-714 2060

Scroll to Top