என் தமிழ்

“சிறந்த ஆசிரியர் நாட்டின் உயிர்நாடி” : கின்றாரா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாட்டம்

கின்றாரா, 22 மே 2026 : கின்றாரா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தினக் கொண்டாட்டம், “சிறந்த ஆசிரியர் நாட்டின் உயிர்நாடி” என்ற கருப்பொருளில் கடந்த மே 15ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

விழாவின் தொடக்கமாக ஆசிரியர் அணிவகுப்பு நடைபெற்றதுடன், பாடல்கள், ஆசிரியர் உறுதிமொழி மற்றும் குழு புகைப்பட அமர்வுகளும் இடம்பெற்றன.

மேலும், அணிச்சல் வெட்டுதல், சிறப்பு உரைகள், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் “Guess Your Teacher” எனும் சுவாரஸ்ய விளையாட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் கல்விச் சேவையை பாராட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த விழா மகிழ்ச்சிகரமான சூழலில் சிறப்பாக நிறைவுபெற்றது.

Scroll to Top