செர்டாங், 17 மே 2026 : புத்ரா பல்கலைக்கழகம்(UPM) மாணவர்கள், 16 மே 2026 அன்று நடைபெற்ற “Master of Dance 4.0” நடனப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளனர். அதேவேளை, அவர்கள் “சிறந்த உடை” விருதையும் கைப்பற்றி இரட்டை வெற்றியைப் பதிவு செய்தனர்.
புத்ரா கலாஷேத்ரா ஏற்பாடு செய்த இந்த போட்டி, பல்வேறு கலை மற்றும் நடன திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் ஆற்றலால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னால் முக்கிய பங்காற்றியவர் நடன அமைப்பாளர் லோக ராஜ் ஆவார். அவரது சிறப்பான நடன அமைப்பும், மாணவர்களின் ஒருங்கிணைந்த அரங்கேற்றமும் பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற UPM மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சாதனை UPM மாணவர்களின் கலைத்திறனையும், அர்ப்பணிப்பையும் மேலும் உயர்த்திக் காட்டுவதாக பாராட்டப்படுகிறது.







