14 மே 2026 : அபிராமிஸ் கேஷ் & கேரி தனது 2வது கிளையை புசோங் பத்து 14 பகுதியில் பிரம்மாண்டமாகத் திறக்கவுள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் மே 16ஆம் தேதி காலை 11 மணி முதல் நடைபெறவுள்ளது.
பந்தார் புசோங் உத்தமாவில் அமைந்துள்ள புதிய கிளையின் திறப்பு விழாவில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள், இலவச பரிசுகள் மற்றும் விருந்தினர்களுக்கான சிறப்பு உபசரிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, காபி மற்றும் தேநீர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவை M. Saravanan டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரேகிருஷ்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹரேகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
புதிய கிளை, 96, ஜாலான் BPU 1, பந்தார் புசோங் உத்தமா, 47100 புசோங் என்ற முகவரியில் அமைந்துள்ளது.






