என் தமிழ்

பாரா ஆசியான் 2027 நோக்கில் மலேசிய அணிக்கான திசை நிர்ணய முகாம் தொடக்கம்

கோலாலம்பூர், 12 மே 2026 : பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி 2027-ஐ முன்னிட்டு மலேசிய அணிக்கான தயாரிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட “Kem Fasa 1 Sukan Para ASEAN 2027” முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி 11 மே 2026 அன்று உற்சாகமாக நடைபெற்றது.

இந்த முகாமில், தேசிய விளையாட்டு கவுன்சிலின் (MSN) தலைமை இயக்குநர் YBrs. என்சிக் ஜெஃப்ரி ங்கடிரின், மலேசிய பாரா விளையாட்டு அணிக்கான எதிர்கால திசை மற்றும் இலக்குகளை விளக்கும் சிறப்பு அமர்வை நடத்தினார்.

இந்த அமர்வு, பாரா ஆசியான் 2027 போட்டிகளை முன்னிட்டு மலேசிய அணியின் திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளும் முக்கிய தளமாக அமைந்தது. அதேவேளை, வரவிருக்கும் போட்டிகளில் தாயக அணியாக களமிறங்கவுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியது.

மலேசியா, 2027 ஆம் ஆண்டுக்கான பாரா ஆசியான் போட்டிகளின் நடத்துனர் நாடாக இருப்பதால், வீரர்கள் உயர்ந்த தரத்தில் தயாராக வேண்டிய அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். முகாமின் மூலம் உடல் திறன் மட்டுமன்றி மனவலிமை, ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று ஆகிய அம்சங்களும் வலுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முகாம், பாரா விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்தி, சர்வதேச அரங்கில் மலேசியாவின் சாதனையை உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Scroll to Top