கொல்கத்தா, 29 ஏப்ரல் 2026 : மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் அமைதியாக நிறைவடைந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த கட்டத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 90 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் முக்கிய 142 தொகுதிகளில் நடைபெற்ற இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த வாக்குப்பதிவுடன் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தற்போது முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.





