கோலாலம்பூர், 26 ஏப்ரல் 2026 : தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் கே. சரஸ்வதி தலைமையில் இல்மு காஸ்ட்ரோனோமி மெலாயு: பூரி கெஞ்சானா நூல் வெளியீட்டு விழாவும், கெம்பாரா மெம்பினா நெகாரா பங்சா கான்வாய் பயணத்தின் புறப்பாட்டு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மலாய் பாரம்பரிய உணவியல் மரபை ஆவணப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பூரி கெஞ்சானா நூல், நாட்டின் பல்வகை பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகப் பாராட்டப்பட்டது.
அதேவேளை, தேசிய ஒற்றுமை மற்றும் தேச கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கெம்பாரா மெம்பினா நெகாரா பங்சா கான்வாய் பயணமும் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கப்பட்டது. இந்த முயற்சி நாடு முழுவதும் ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் தேசிய உணர்வை வலுப்படுத்தும் தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டோர், பாரம்பரியம், உணவியல் மற்றும் தேசிய ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி புதிய பரிமாணத்தை உருவாக்குவதாக கருத்து தெரிவித்தனர்.






