என் தமிழ்

கிழக்கு கடற்கரை தொழில்நுட்ப மாநாட்டில் வேலைவாய்ப்பு, முதலீட்டு வாய்ப்புகள் வலியுறுத்தல்

பாஹாங், 25 ஏப்ரல் 2026 : மலேசிய தொழில்நுட்பவியலாளர் வாரியம் ஏற்பாடு செய்த கிழக்கு கடற்கரை கருத்தரங்கில், பாஹாங், கிளந்தான் மற்றும் திரெங்கானுவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர்.

யயாசான் பாஹாங் பல்கலைக்கழகக் கல்லூரி நடத்திய இந்த கருத்தரங்கில், மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகம், மலேசியா பாஹாங் பல்கலைக்கழகம், ஃபார்ம் ஃப்ரெஷ், பிஏஎஸ்எஃப் பெட்ரோனாஸ் கெமிக்கல்ஸ் மற்றும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்தனர்.

முன்னாள் மூத்த அமைச்சர் முஸ்தபா முகமட் சிறப்புரையாற்றி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உருவாகி வரும் முதலீட்டு மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார். இந்தப் பகுதி தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய மையமாக உருவெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் பேசிய ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவன பிரதிநிதிகள், பல்வேறு துறைகளில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் இருப்பினும், நகரங்களுக்கு வெளியே பணியாற்ற இளம் பட்டதாரிகள் விருப்பம் காட்டாதது சவாலாக உள்ளதாக தெரிவித்தனர். வேலைவாய்ப்பு இல்லாமை குறித்து பலர் கவலை தெரிவித்தாலும், உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தாதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொழில்நுட்ப திறன், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். பிராந்திய வளர்ச்சியில் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்கு மேலும் வலுப்பெற வேண்டும் என்பதும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Scroll to Top