என் தமிழ்

‘MR X’ Gala Premiere : நிகழ்ச்சியில் ஆர்யா பங்கேற்பு

கோலாலம்பூர், 17 ஏப்ரல் 2026 : தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா, தனது புதிய திரைப்படமான ‘MR X’ படத்தின் கலைநிகழ்ச்சி (Gala Premiere) நிகழ்ச்சிக்காக மலேசியா வந்தார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 17, 2026 அன்று மாலை 7 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள TGV Pavilion Bukit Jalil திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் மற்றும் மலேசிய ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆர்யாவுடன் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன், அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

‘MR X’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் வெளியீடு காணும் நிலையில், அதன் பிரச்சார நிகழ்வாக மலேசியாவில் இந்த கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பையும், ரசிகர்களின் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியது.

Scroll to Top