14 ஏப்ரல் 2026 : பொதுமக்களின் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், “இலவச மருத்துவ முகாம் 2026” நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி பேட்டாலிங் ஜெயாவில் நடைபெற உள்ளது.
இந்த முகாம், Persatuan Sri Sathya Sai Global Malaysia (Taman Yarl) அமைப்பினால், Persatuan Skuad Kebajikan Seri Setia Selangor அமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை Dewan Serbaguna MBPJ PJS 6/1, Kampung Lindungan பகுதியில் நடைபெறவுள்ள இந்த முகாமில், பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த முகாமில் மருத்துவர் ஆலோசனை, இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை, BMI மதிப்பீடு, பல் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, பெண்கள் சுகாதார பரிசோதனை, மனநலம் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் இடம்பெறுகின்றன. மேலும், உணவியல் ஆலோசனை மற்றும் இரத்த தான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் சுகாதார பாதுகாப்பை முன்னிறுத்தும் இந்த முயற்சி, பொதுமக்கள் தங்கள் உடல்நலனை பராமரிக்கவும், நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






