ஆறு மாதம் ஆகின்றது MH370 விமானம் காணாமல்போய் அதில் பயணித்த 239 பேர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெரும் பொருட்செலவில் மிகப் பெரிய தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே செலவுமிக்க தேடலாக அது அமைந்துள்ளது.
எந்த பாதையில் விமானம் பயணித்திருக்கும் சாத்தியம் உண்டோ அந்த பாதைகளில் முதலில் தேடப்படும் என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் தலைவர் டோலன் கூறியதாக யுகே அறிவித்துள்ளது.