03 ஏப்ரல் 2026 : உலகளவில் அமெரிக்கா–இரான் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை வழக்கமான முறைகளில் சமாளிக்காமல், புதிய மற்றும் சிந்தனைசார் அணுகுமுறைகள் அவசியம் என MUAFAKAT NASIONAL (MN) வலியுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியின் சுமையை நேரடியாக மக்கள்மீது ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அரசு பொதுமக்களின் எதிர்வினைகளை தவறாக புரிந்து கொள்ளாமல், வெளிப்படையான (transparency) அணுகுமுறையுடன் செயல்பட்டு, திறமையான மற்றும் புத்திசாலித்தனமான தீர்வுகளை கொண்டு வர வேண்டும் என MN கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உலக எண்ணெய் மற்றும் வர்த்தக துறைகளில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைத்து, தற்போதைய செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி MN, பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரிடம் உடனடி மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு குறுகிய மற்றும் நடுத்தர கால பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக “Green Currency” பயன்பாடு மற்றும் மலேசியா வழங்கும் CPO (Palm Oil) மற்றும் மற்ற நாடுகள் வழங்கும் டீசல் ஆகியவற்றுக்கிடையில் நேரடி பரிமாற்ற (barter trade) முறையை அமல்படுத்தும் யோசனை இடம்பெற்றுள்ளது. இது ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் கச்சா எண்ணெய் விநியோக தாமதத்தைத் தவிர்க்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜொகூர் மற்றும் மலாக்கா கடல் பகுதிகளில் “dark armada” எனப்படும் சட்டவிரோத கப்பல் நடவடிக்கைகள் மூலம் STS (Ship-to-Ship) மாற்றங்கள் நடைபெற்று, தடைக்கு உட்பட்ட எண்ணெய்கள் மலேசிய எண்ணெயாக குறிக்கப்படுகின்றன. இத்தகைய சட்டவிரோத எண்ணெய்களை கடுமையாகக் கட்டுப்படுத்தி, தேவையானால் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் MN வலியுறுத்தியுள்ளது.
நடுத்தர கால நடவடிக்கையாக, அமெரிக்க டாலர் (USD) மீது அதிக நம்பிக்கை வைப்பதை குறைத்து, சீனாவின் RMB நாணயத்தை பயன்படுத்தும் மாற்று வர்த்தக முறைகளையும் ஆராய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த “out-of-the-box” அணுகுமுறைகள் நாட்டின் வர்த்தக நிலைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் MN நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், உலக எண்ணெய் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் வருவாயில் (USD 12 பில்லியனுக்கு மேல்) ஒரு பகுதியை டீசல் விலையை குறைப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் MN கூறியுள்ளது. குறிப்பாக மலேசிய தீபகற்பம், சபா மற்றும் சரவாக் இடையிலான விலை வேறுபாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடி ஒரு அரசியல் விவகாரமாக மாறாமல், மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசு உடனடி மற்றும் செயல்திறன் வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என MN கேட்டுக்கொண்டுள்ளது.





