வாஷிங்டன், 01 ஏப்ரல் 2026 : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Oracle நிறுவனம், உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, OpenAI உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, ஏஐ மையங்கள் மற்றும் தரவுத்தள கட்டமைப்புகளில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அதிகரித்த செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஏஐ தொடர்பான பெரிய முதலீடுகள் மற்றும் டேட்டா சென்டர் கட்டுமானச் செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் செலவினத்தை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, உலகளாவிய தொழில்நுட்ப துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





