ஜெருசலேம், 01 ஏப்ரல் 2026 : ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து, அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகளும், இஸ்ரேலும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
ஒரு மாதத்திற்கு மேல் நீடித்து வரும் இந்த மோதல், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “ஈரானுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக ஈரான் ஆட்சியை பலவீனப்படுத்தியுள்ளோம். தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும்,” என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான் அரசு தற்போது நிலைகுலைந்துள்ளதாகவும், விரைவில் அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





