மஇகா தேசிய மகளிர் பகுதி ”நாம்” பேரியக்கத்துடன் இணைந்து மகளிர்கான திறமை மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. 07/09/2014 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ”நாம்” பேரியக்கத்துடன் இணைந்து ம இ கா மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் மகளிர்க்கான முதல் தறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கி வைக்கப்பட்டது. இத்தகைய பயிற்சிகள் நாடு முழுதும் “நாம்” பேரியக்கத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்படும். இந்த பயிற்சி அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும். இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள 50 தொகுதிகள் தேர்வு செய்யபட்டுள்ளன. இந்த வாய்ப்பை நமக்கு வழங்கிய ”நாம்” பேரியக்கத்தின் தலைவர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் சுமார் 20,000 மகளிர் பயன் பெறுவர். ஒவ்வொரு தொகுதிலும் பலதரப்பட்ட நிலையில் இருந்து 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தையற் கலை, மணப் பெண் அலங்காரம், மீ செய்தல், கேக் செய்தல், க்ரிஸ்டல் செய்தல், பூ அலங்காரம், பரிசு பொருட்கள் செய்தல் ஆகிய பயிற்சி வகுப்புகள் இரண்டு மாத காலத்திற்கு வழங்கப்படும். 2 மாதங்களுக்கு பிறகு பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு எங்களாலேயே ஏற்படுத்தி கொடுக்கப்படும். ”நாம்” பேரியக்கத்தின் உதவியுடன் பயிற்சி மாணவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகளை இதன் மூலம் ம இ கா மகளிர் பிரிவும் “நாம்” பேரியக்கமும் அணுகிட இந்த முயற்சி உதவும். இதன் பயிற்சி புதிய தொழில்முனைவோர் உருவாக்கி அதன் மூலம் அவர்களை சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
இவ்வாறு பேசிய ம இ கா மகளிர் பிரிவு தலைவி திருமதி. மோகனா முனியாண்டி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டத்தோ M.சரவணன் இந்த பயிற்சியை முடிக்கும் மகளிர்க்கு “நாம்” பேரியக்கத்தின் விவசாய திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
பிறமாநிலங்களின் துவக்கவிழா