என் தமிழ்

ரஷியாவில் வெள்ளம் : 3.27 லட்சம் பேர் பாதிப்பு – அவசர நிலை அறிவிப்பு

மாஸ்கோ, 29 மார்ச் 2026 : ரஷியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தகேஸ்தான் நகரில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையை முன்னிட்டு நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த வெள்ளத்தால் சுமார் 3.27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89,700 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழையின் தாக்கத்தால் ஒரு ரெயில்வே பாலமும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Scroll to Top