தெஹ்ரான், 28 மார்ச் 2026 : இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏவுகணைகளில் “நன்றி இந்தியா” என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்களும் சேர்க்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நடவடிக்கை, “ட்ரூ பிராமிஸ் 4” (True Promise 4) என்ற பெயரில் ஈரான் மேற்கொண்டு வரும் 83-வது ராணுவ தாக்குதலின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, Embassy of Iran in Mumbai வெளியிட்ட சமூக ஊடக பதிவிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, ஆதரவும் அன்பும் வெளிப்படுத்திய ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் மக்களுக்கு ஈரானின் வான்வெளி படை நன்றி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.





