நியூயார்க், 28 மார்ச் 2026 : அமெரிக்காவை தளமாக கொண்ட தரவு பகுப்பாய்வு நிறுவனம் Morning Consult நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
68 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் அவர் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். கடந்த ஆண்டும் அவர் 75 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் முதலிடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை 26 சதவீத மக்கள் அவரது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சுமார் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் தலைவர் Guy Parmelin உள்ளார். அவருக்கு 62 சதவீத ஒப்புதல் மற்றும் 20 சதவீத அதிருப்தி மதிப்பீடுகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது இடத்தில் தென் கொரிய அதிபர் Lee Jae-myung உள்ளார்; இவருக்கும் 62 சதவீத ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், 30 சதவீத அதிருப்தி மதிப்பீடு உள்ளது.
மேலும், கனடா பிரதமர் Mark Carney 55 சதவீத ஒப்புதலுடன் 7-வது இடத்தைப் பிடித்து முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump 39 சதவீத ஒப்புதலுடன் 14-வது இடத்தில் உள்ளார். அவருக்கு 55 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மிகக் குறைந்த ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்ற தலைவராக பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron உள்ளார். அவருக்கு 17 சதவீதம் மட்டுமே ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், 75 சதவீதம் அதிருப்தி பதிவாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Instagram சமூக வலைத்தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராகவும், அரசியல்வாதியாகவும் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார்.





