என் தமிழ்

மத்திய கிழக்கு போர் குறித்து ஆலோசனை: “டீம் இந்தியா”வாக இணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

டெல்லி, 28 மார்ச் 2026 : மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களின் (தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர) முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பின்னர் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய பிரதமர், “அனைவரும் ‘டீம் இந்தியா’வாக இணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்தால் இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். இந்திய குடிமக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மை முன்னுரிமை” என்று வலியுறுத்தினார்.

Scroll to Top