கோலாலம்பூர், 27 மார்ச் 2026 : கோலாலம்பூரில் கேஎல் மாரத்தான் 2026 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை, பிபிபி (PPP) கட்சியின் தலைவர் டத்துக் டாக்டர் லோகா பாலாவின் சார்பில் டத்துக் இந்தர் சிங் திறந்து வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டி, கோலாலம்பூர் Marathon United விளையாட்டு கழகமும், தமிழ் நாளிதழான தமிழ் மக்கள் ஓசை (Harian Tamil Makkal Osai) இணைந்து ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பல்வேறு தரப்பினரும், ஓட்டப்பந்தய ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். உடல் நலன் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் சமூக ஒற்றுமையையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் என்று நிகழ்வில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.






