என் தமிழ்

நேபாள பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு மோடி வாழ்த்துகள்

புதுடெல்லி, 27 மார்ச் 2026 : நேபாளத்தில் ஏற்பட்ட அரசியல் பதற்றத்திற்குப் பிறகு புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவர் பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்று நாட்டை நிர்வகித்து வந்தார். பின்னர் கடந்த மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து, அக்கட்சியை சேர்ந்த 35 வயதான பாலேந்திர ஷா இன்று பிரதமராக பதவியேற்றார். நேபாள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பதவியேற்றார். இளம் வயதில் பிரதமராக பதவியேற்றவராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலேந்திர ஷாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பாலேந்திர ஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நேபாள மக்கள் உங்கள் தலைமையில் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது. இந்தியா-நேபாள உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top