புதுடெல்லி, 17 மார்ச் 2026 : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித்தாக்குதலில் 400 பேர் பலியானார்கள். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-
காபூலில் உள்ள போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழித்தாக்குதலை இந்தியா திட்டவட்டமாக கண்டிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையை போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தி இருப்பது பொதுமக்களின் உயிரை பறித்த ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறை செயலாகும். தற்போது பாகிஸ்தான் ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கை என சித்தரிக்க முயன்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.




