என் தமிழ்

HTF மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு 700 பொட்டலம் புலுட் ஹிதாம் கஞ்சி வழங்கப்பட்டது

கங்கார், 17 மார்ச் 2026 : ரமலான் மாதத்தை முன்னிட்டு, Hospital Tuanku Fauziah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு மொத்தம் 700 பொட்டலம் புலுட் ஹிதாம் கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த முயற்சி, Hospital Tuanku Fauziah மருத்துவமனை வருகையாளர் குழுவினரால் “ரமலான் காங்சி ரெஸ்கி” (Kongsi Rezeki Ramadan) திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

மருத்துவமனை வருகையாளர் குழுத் தலைவர் யாகூப் அபு சேமன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து இந்த “காங்சி ரெஸ்கி” திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

இந்த திட்டத்தின் மூலம், வருகையாளர் குழு உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து நலமறிந்து, உறவு மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தில் பொதுவாக ரமலான் காலத்தில் வழங்கப்படும் புபூர் லம்புக் கஞ்சிக்கு மாற்றாக, மக்கள் விரும்பும் புலுட் ஹிதாம் கஞ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை சந்தித்து உரையாடிய பின்னர், 700 பொட்டலம் புலுட் ஹிதாம் கஞ்சி வழங்கும் நிகழ்வை அவர் வழிநடத்தினார்.

இந்த நிகழ்வில் Mohd Abdul Rahman Ismail உட்பட மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருகையாளர் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Scroll to Top