என் தமிழ்

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி

பெங்களூரு, 16 மார்ச் 2026 : 19வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற வழி அமைந்துள்ளது.

Scroll to Top