காபூல், 14 மார்ச் 2026 : ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த எல்லைத் தாண்டிய வன்முறை சம்பவங்களில் இதுவரை ஆப்கானிஸ்தானில் 75 பேர் உயிரிழந்துள்ளதுடன், 193 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
இந்த தகவலை ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவி அமைப்பு வெளியிட்டுள்ளது.




