இப்பொழுது எது நடக்கிறதோ அதை மட்டும் பேசுங்கள் வீண் கதை வேண்டாம்

இப்பொழுது எது நடக்கிறதோ அதை மட்டும் பேசுங்கள் வீண் கதை வேண்டாம்

IMG_6121

நமது ம.இ.கா கட்சியில் உள்ளவர்கள் முதலில் பழையதை தொட்டு பேசுவதும்,பழம்பெருமைகளை பேசுவதையும் முதலில் விடவேண்டும்.அன்றைய அரசியலின் காலத்திற்கும் இன்றைய நடப்பு அரசியலுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு இத்தனை சம்பளம் வாங்குகிறார்.இதை செய்கிறார்,அதை செய்கிறார் என்று
கூச்சலிடுவது வீண் காரணம். அவர் அவருக்கு வழங்கப்பட்ட வேலையைச் திறமையாக செய்துக்கொண்டிருக்கும் அதே
வேளையில் அவரால் இயன்ற அளவிற்கு சமுதாயத்திற்கு உதவிச் செய்துக் கொண்டிருக்கும் ஆனால் அவரது
தலைமைத்துவத்தில் ம.இ.கா இது இது செய்தது,இது இது செய்யவில்லை அப்பொழுது யாரும் கேட்கவில்லை,ஆனால் நடப்புத் தேசியத் தலைவருக்கு மட்டும் அனைவரும் காரணம் கேட்பது அநியாயம் என்று கூறுவது சிறுப்பிள்ளைதண்ம்.கடந்துச் சென்ற காலம் அழும் ஒப்பாரி வைத்தாலும் மீண்டும் வராது.புரிந்துக் கொள்ளுங்கள்.ஆக அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.ஆனால் நமது சமுதாயத்தின் எதிர்கால நலனை முன்னிறுத்தி நடப்பில் நம் கண் எதிரின் தேசியத் தலைவரால் தவறு நடக்கும் பொழுது அதனை சரி செய்ய நினைப்பதும் சரி செய்வதும்தானே உத்தமம்.

அதுமட்டுமில்லாது,டத்தோ ஸ்ரீ உத்தாமா அவர்களை பதவி விலக சொல்லும் கும்பல் நடு கூட்டத்தை சார்ந்த
சுயநலமிக்கக் கூட்டமாகத்தான் இருக்கவேண்டும்.நம்மில் ஒருவர் சிறப்பு தூதராக இருக்கிறாரே அது அவருக்கு
கிடைக்கும் அங்கீகாரம் என்று பெருமிதமாக எண்ணாமல் அவரை பதவி விலக சொல்கிறார்கள்.நான் கேட்கிறேன் அவர்
அந்த விட்டு விலகினால் மீண்டும் அப்பதவியில் இன்னொரு இந்தியர் நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது? இப்படி சிறிதுக்
கூட யோசிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மெளனம் காத்து,தள்ளிபோட்டுதன் பலனாகத்தான் இன்று பல செண்ட்டர் பதவிகளும், GLC துறை பதவிகளும் நம்மை விட்டு போனது என்பதை என்றுத்தான் உணரப்போகிறார்கள்?

ஆக இப்பொழுது முக்கிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தேசியத் தலைவர்,சமுதாயத்திற்கும் கட்சிக்கும் எது நம்மை
பயக்குமோ அதனை உடனுக்குடன் காலம் தாழ்த்தாமல்,மெளனம் கொள்ளாமல் செய்தால் யாரும் யாரை பற்றிப் பேச
வேண்டிய அவசியம் எழாது .நமது பொறுப்பு எது,திட்டம் எது,அதை நாம் எப்படி செயலாற்ற போகிறோம் என்கிற தெளிந்த் சிந்தனை கொண்டு செயல்பட்டால் நடப்பு தேசியத் தலைவர் தலை நிமிர்ந்து நடைப்போடலாம்.