10 மார்ச் 2026 : இயக்குனர் தனேஷ் பிரபு இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படமான ‘வீரக் கருப்பு’, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடந்த மார்ச் 5, 2026 முதல் திரையிடப்பட்டு ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியாகி ஐந்தாவது நாளாகியும் படம் சிறப்பான வசூலுடன் ஓடிவருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தை முனைவர் டாக்டர் இலட்சப்பிரபு மற்றும் டாக்டர் கேஷ் வில்லன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் டாக்டர் கேஷ் வில்லன்ஸ், விக்னேஷ் பிரபு, டாக்டர் மதியழகன், MGuys ராஜா, விக்கி நடராஜா, டாக்டர் ரூபினி கிருஷ்ணன், விமல் நாராயணன், ரிஷிகேசன், பாடகர் டர்போ கானா, கௌசல்யா, சிகு அம்பிகாபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘வீரக் கருப்பு’ திரைப்படம் குல தெய்வ வழிபாடு, அன்பு, பாசம், துரோகம், குடும்ப உறவுகள், நட்பு, காதல், சமூக ஒற்றுமை மற்றும் இறைநம்பிக்கை போன்ற பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன் சோழர் வரலாறு, மர்மம், திகில், அதிகார சதி மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள், பாடல்கள், நடனங்கள் ஆகியவை இடம்பெற்று, பக்தி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இணைந்த ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகியுள்ளது.
குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய இந்த திரைப்படம் மலேசியா முழுவதும் மற்றும் சிங்கப்பூரிலும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
படக்குழுவினர் தெரிவித்ததாவது, “வீரக் கருப்பு என்பது இந்தியர்களின் ஆன்மீக உணர்வையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் படம். ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளனர்.





