என் தமிழ்

தியேட்டர்களில் வெளியாகும் அஜித்குமாரின் ஆவணப்படம்?

05 மார்ச் 2026 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், சிறந்த கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அவர் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேசிங் என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியுள்ளார்.

இந்த அணி துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளது. மேலும் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும் இந்த அணி திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், அஜித்குமார் ரேசிங் அணியை மையமாகக் கொண்டு RACING ISN’T ACTING” என்ற ஆவணப்படம் தயாராகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது கிடைத்த தகவலின்படி, அஜித்குமாரின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி இந்த ஆவணப்படத்தை தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பின்னர் இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என கூறப்படுகிறது. ரேசிங் உலகில் அஜித்குமார் படைத்த சாதனைகளை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top