சென்னை, 26 பிப்ரவரி 2026 : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னையில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், அக்சர் படேலும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். சாம்சன் அதிரடியான ஆட்டம் வெளிப்படுத்தி 24 ரன்கள் எடுத்த பின்னர் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வேகமான ரன் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.





