என் தமிழ்

நெசட் சபாநாயகர் பதக்கம் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வழங்கியது.

ஜெருசலேம், 26 பிப்ரவரி 2026 : இரண்டு நாள் அரசுமுறை பயணத்திற்காக பிரதமர் Narendra Modi நேற்று இஸ்ரேல் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காலை தனியார் விமானத்தில் பயணமான அவர், மாலை சுமார் 4.30 மணியளவில் இஸ்ரேல் வந்தடைந்தார். Ben Gurion International Airport விமான நிலையத்தில் அவரை, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu நேரில் சென்று வரவேற்றார்.

அப்போது அவரது மனைவி Sara Netanyahu உடனிருந்தார். பிரதமர் மோடி இஸ்ரேல் வருகை தருவது இதுவே இரண்டாவது முறையாகும். பின்னர் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து இருநாட்டு பிரதமர்களும் விமான நிலையத்திலேயே தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மக்களிடையே யான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்து ழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு, பேசினார். இதுதொடர்பாக தனது உரையின்போது, “140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் மற்றும் நட்புறவு, மரியாதையின் செய்தியை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. அதனால் ஏற்பட்ட உங்கள் வலியை நாங்களும் உணர்ந்தோம். பொதுமக்கள் மீது நடத்தப்படும் கொலைகளையும், பயங்கரவாதச் செயல்களையும் எந்தச் சூழலிலும் நியாயப்படுத்த முடியாது; இவ்வாறான துயர நேரத்தில் இந்தியா முழு உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இஸ்ரேலுடன் நிற்கிறது என்று பிரதமர் Narendra Modi தெரிவித்தார்.

மும்பையில், இஸ்ரேல் குடிமக்கள் உள்பட அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாக கூறினார். சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, வளர்ச்சியை பாதித்து, நம்பிக்கையை நசைக்கும் நோக்கமே பயங்கரவாதத்தின் குறிக்கோள் என்றும், அதை முறியடிக்க உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இதன் பின்னணியில், காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், United Nations Security Council அங்கீகரித்த இந்தத் திட்டம், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மத்திய கிழக்குப் பிராந்திய மக்களுக்கு நீடித்த மற்றும் நியாயமான அமைதியை வழங்கவும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத்தை வழிகாட்டியாக கொண்டு அனைத்து முயற்சிகளும் முன்னேற வேண்டும் என்றும், அமைதிக்கான பாதை எளிதானதல்ல என்றாலும் உரையாடல், நிலைத்தன்மை மற்றும் அமைதிக்காக இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரைக்கு பின், பிரதமர் மோடிக்கு ‘நெசெட் சபாநாயகர்’ பதக்கம் வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Amir Ohana அந்த விருதை வழங்கினார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த கௌரவத்தை பெறும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மேலும், Knesset-ல் உரையாற்றிய முதல் இந்திய பிரதமரும் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

United States – Iran இடையே நீடித்து வரும் பதற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் மத்திய கிழக்கில் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் வேளையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.

Scroll to Top