என் தமிழ்

இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

புதுடெல்லி, 20 பிப்ரவரி 2026 : இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார். இருநாடுகளுக்கிடையிலான பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். குறிப்பாக சுகாதாரம், எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

Scroll to Top