என் தமிழ்

ரஜினி – கமல் இணையும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்

சென்னை, 20 பிப்ரவரி 2026 : நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது திரைப்படத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கிறார். இந்த படத்தை ‘டான்’ திரைப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ரஜினி–கமல் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கார் மெக்கானிக் ஷெட்டில் பழமையான மாடல் கார் ஒன்றுடன் அமைந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால், கதை 1960-களின் பின்னணியில் அமையக்கூடும் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர். மேலும், இப்படத்தின் புரோமோ வீடியோ வரும் 21-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இந்த அறிவிப்பு இரவு 7.12 மணிக்கு வெளியிடப்பட்டது. கமலின் பிறந்தநாள் 7-ஆம் தேதி மற்றும் ரஜினியின் பிறந்தநாள் 12-ஆம் தேதி என்பதைக் குறிக்கும் விதமாகவே 7.12 மணியை தேர்வு செய்துள்ளனர். அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஜினி தற்போது ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த பணிகள் நிறைவடைந்தவுடன், மார்ச் மாதம் முதல் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Scroll to Top