என் தமிழ்

ஏ.ஐ. தாக்கம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களை டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார்

புதுடெல்லி, 19 பிப்ரவரி 2026 : உலகளாவிய தெற்கு நாடுகளில் நடைபெறும் முதல் உச்சி மாநாடு என்ற சிறப்பைப் பெற்ற இந்த நிகழ்வை முன்னிட்டு, ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இன்று இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், மாநாட்டை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் கஜகஸ்தான், பின்லாந்து, மொரீசியஸ், பூடான், நெதர்லாந்து, கிரீஸ், குரோசியா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும், ஸ்பெயின், சுலோவேக்கியா, இலங்கை, எஸ்தோனியா நாடுகளின் ஜனாதிபதிகளையும் பிரதமர் மோடி இன்று நேரில் வரவேற்றார்.

Scroll to Top