என் தமிழ்

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு

புதுடெல்லி, 18 பிப்ரவரி 2026 : தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று முடிவடைகிறது. இதேபோல் கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல்–மே மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இவ்வாண்டு அது மார்ச் மாதத்தின் மத்தியில்தான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Scroll to Top