என் தமிழ்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த புதிய தகவல்கள்

15 பிப்ரவரி 2026 : கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

மேலும், கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து ரஜினி–கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

திரை வட்டாரங்களின் தகவல்படி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் படம் இதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில், ‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top