என் தமிழ்

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் – பிரதமர் மோடி பெருமிதம்

29 ஜனவரி 2026 : ”மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி மந்திரி இவரே. இது, இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய விஷயமாகப் பதியப்படும். “

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 10 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, ப. சிதம்பரம், ஒன்பது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top