என் தமிழ்

மலேசியத் தமிழர் சங்க குழுவினர் மதுரையில் உள்ள உலகத் தமிழச் சங்கத்திற்கு வருகை புரிந்தனர்.

மதுரை{இந்தியா}, 06 ஜனவரி 2026 : அயலக தமிழர் விழா 2026 இல் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள மலேசியத் தமிழர் சங்க உறுப்பினர்கள் 06 ஜனவரி 2026 அன்று மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை புரிந்தனர். உலகத் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகளை சந்தித்து மலேசிய தமிழர் மற்றும் மலேசிய தமிழ் பொழி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். அறங்காவலர் திரு. தங்கவேலு, தேசியத் தலைவர் பரமசிவம் மருதை, தேசிய உதவித் தலைவர் ஆறுமுகம் மற்றும் தேசியப் பொருளாளர் பத்துமாலை ஆகியோருடன் மற்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் சான்றோர் விழாவிலும் மலேசியத் தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும் இயக்குநருமான முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானை அவர்களையும் மலேசியத் தமிழ்ச் சங்கக் குழுவினர் சந்தித்து உரையாடினர்.

முன்னதாக மதுரையில் ஆட்சி புரியும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மனின் அருளை பெற்றனர் மலேசியத் தமிழர் சங்கக் குழுவினர்.

Scroll to Top