என் தமிழ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!

atal_bihari

முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பு அவரது 90வது பிறந்தநாள் அன்று அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க மோடி அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது 90வது பிறந்தநாள் வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பாரத ரத்னா விருது குடியரசுத் தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்த மரபை மாற்றி வாஜ்பாய் பிறந்தநாள் அன்று அவருக்கு விருது வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மோடி அரசின் முதல் பாரத ரத்னா விருதை வாஜ்பாய்க்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top