என் தமிழ்

சபா மாநில கரம்புனை தொகுதியில் பாஸ் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துகள்

கோலாலம்பூர், 30 நவம்பர் 2025 : மலேசியா விலாயத் பெர்செகுதுவான் பாஸ் ஆதரவாளர் பேரவை (DHPP WPKL), கரம்புனை தொகுதி வேட்பாளருமான பாஸ் சபா மாநிலத் தலைவருமான டாக்டர் அலியாக்பர் குலசன் அவர்களுக்கு சபா மாநிலத் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வரலாற்று வெற்றி, பாஸ் மத்தியத் தலைமையகம், பாஸ் விலாயத் பெர்செகுதுவான், கட்சியின் அடிப்படை அமைப்புக்கள், DHPP உறுப்பினர்கள், பெரிகாத்தான் நேஷனல் ஆதரவாளர்கள் மற்றும் பாஸ் கட்சிக்கு முதன்முறையாக நம்பிக்கை வழங்கிய சபா மக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்த வெற்றி எளிதில் கிடைத்ததல்ல. இது மக்களின் நலன், ஒற்றுமை மற்றும் சமூக நலநிலையை முன்னிறுத்தி விடாமுயற்சி செய்த அனைத்து தரப்பினரின் கடின உழைப்பு, திறம்படச் செயல்பாடு மற்றும் தியாகத்தின் பலனாகும்.

இந்த உணர்வையும் ஊக்கத்தையும் நாம் தொடர்ந்து பேணிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஒவ்வொரு பொறுப்பையும் நேர்மை மற்றும் முழு பொறுப்புணர்வுடன் மேற்கொள்வதே எங்களது கடமை.

பாஸ் – எல்லோருக்கும்

அன்புடன்,
திரு. லோகந்தீரன் முருகாஸ்
செயலாளர், பாஸ் ஆதரவாளர் பேரவை
விலாயத் பெர்செகுதுவான் கோலாலம்பூர்
DHPP பண்டார் துன் ரஸாக் கிளைத் தலைவர்

Scroll to Top