என் தமிழ்

2025 ஆம் ஆண்டு SPM மற்றும் STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கான “கல்வி வாழ்வு” ஆன்மீக நிகழ்ச்சி

செர்டாங், 02 நவம்பர் 2025 : மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநில கல்வி மற்றும் தொழில்நுட்ப பிரிவு, செர்டாங், காஜாங், பூசோங், செமினி மற்றும் செராஸ் வட்டாரங்களின் இணை ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டு SPM மற்றும் STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கான “கல்வி வாழ்வு” ஆன்மீக நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நவம்பர் 1, 2025 அன்று ஸ்ரீ சிவசுப்பிரமணியர் UPM ஆலயத்தில் நடைபெற்றது.

​இந்தச் சிறப்பு வாய்ந்த ஆன்மீக நிகழ்வில், மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில தலைவர் தொண்டர் மணி அசோகன் மூக்கன், துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், இந்து சங்கத் தலைவர்கள் மற்றும் வட்டாரப் பிரதிநிதிகள், ஏற்பாட்டுக் குழுவினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஏறக்குறைய 100 மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

​🧠 தன்னம்பிக்கை உரை மற்றும் ஆசிகள்

​நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, தன்முனைப்புப் பேச்சாளர்களான டாக்டர் புனிதன் சண்முகம் மற்றும் டாக்டர் சஞ்சய் சண்முகம் ஆகியோர் “தேர்வுக்கு எழுதும் முன் மனநிலையும் உடல் நலமும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஆன்மீக வழியில் உரையாற்றினர். இறைவன் அருளால் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான தேர்வு ஆண்டாக அமையும் என்று கூறி, இறை நாமத்தோடு மாணவர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியை ஊட்டினர்.

​🙏 தலைவர்களின் வாழ்த்துச் செய்தி

​மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர் மணி அசோகன் மூக்கன் தமது சிறப்புரையில், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் தங்களது கல்வி, கேள்வியை இறை ஆசையோடு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நாடு அடைந்து வரும் வளர்ச்சியில் நம் இந்திய மாணவர்களின் உயர் கல்வி தேர்ச்சியை வலுப்படுத்தும் வகையிலும் மேன்மைப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இத்தகைய ஆக்கபூர்வமான நிகழ்ச்சிக்கு தொடர்ந்து மலேசிய இந்து சங்கம் குறிப்பாக சிலாங்கூர் மாநில கல்வி மற்றும் தொழில்நுட்ப பிரிவு தொடர்ந்து அதன் பங்களிப்பை பூர்த்தி செய்து வருகின்றன.

​நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. சந்துரு கணேசன் தனது தலைமை உரையில், மாணவர்கள் தங்கள் விடாமுயற்சியால் இரவு பகலும் படித்த புத்தகங்களின் அறிவோடு, எந்த ஒரு பதற்றமும் இல்லாமல், மனத்தெளிவோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தேர்வை ஒரு போர்க் களமாகப் பார்க்காமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, இறை ஆசையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். இந்த கல்வி வாழ்வு, மாணவர்களின் வாழ்க்கை தரத்தை, சிந்தனைத் தெளிவை, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு வாழ்வியல் அங்கமாக அமைந்தது.

​ ஆன்மீக பூஜைகளும் பிரசாதங்களும்

​மாணவர்களின் வெற்றிக்காகச் சிறப்பான ஆன்மீகப் பூஜைகள் நடைபெற்றன. சரஸ்வதி அம்பாளின் முன்னிலையில் கல்வியாகம் தொடங்கி, அனைத்து மாணவர்களின் ஆசியோடும், தேன் அபிஷேகம், பால் அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகியவை நிவர்த்திக் கடனாகச் செய்யப்பட்டன.

​அதனைத் தொடர்ந்து அர்ச்சனைகள், கையில் ரக்ஷா கட்டுதல், வித்யா ரம்பம் ஆகியவை நடந்தேறின. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறு பிள்ளையார் விக்கிரகம் மற்றும் பென்சில் பாக்ஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும், ஸ்ரீ நவசக்தி நற்பணி மன்றத் தலைவி திருமதி அன்னலட்சுமி கமலா செல்வம் அவர்களின் தலைமையில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

​இந்த ஆன்மீக நிகழ்ச்சி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனத்தெளிவையும், நம்பிக்கையையும் அளித்து, சிறப்பான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான ஆன்மீக பலத்தை அளித்துள்ளது.

​வெளியீடு:

மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநில கல்வி மற்றும் தொழில்நுட்ப பிரிவு.

Scroll to Top