சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. மின்தடை காரணமாக 10,000 வீடுகள் இருளில் மூழ்கின.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அமெரிக்கன் கன்யான் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.0 ரிக்டர் என பதிவாகி இருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.பூமிக்கு கீழே 10.8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை சான் பிரான்சிஸ்கோ, டேவிஸ் ஆகிய நகரங்களிலும் மக்கள் உணர்ந்துள்ளனர். டுவிட்டரில் நிலநடுக்கத்தால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலநடுக்கத்தால், நாபா நகரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டது. 10,000 வீடுகள் இருளில் மூழ்கின.
Previous Post: காதலனுடன் அனுஷ்கா ரகசிய சுற்றுலா
Next Post: 200 விமானப் பணியாளர்களை இழந்த MAS நிறுவனம்