MH17 விபத்தில்:54 வயது கராம்ஜிட்டின் நல்லுடல் இன்று காலை 11.40 மணியளவில் கிள்ளான் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது.முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு நிர்வாணா மின் சுடலையிலிருந்து அஸ்தியைப் பெற்றக்கொண்ட அவரது குடும்பத்தினர் கிள்ளான் துறைமுகத்தில் கடலில் கரைத்தனர். கராம்ஜிட் சிங் கர்னாயில் சிங் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நெதர்லாந்திலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த MH17 விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளில் ஒருவராவார்.
கராம்ஜிட்டின் அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது
