கோலாலம்பூர், 15 அக்டோபர் 2025 : டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் ஊக்கமூட்டும் தலைமைத்துவத்தையும், அர்ப்பணிப்பையும், மக்களுக்கான பெரும் பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில், ”DSM” எனும் சிறப்பு பாடல் வெளியீடு காணவுள்ளது.

இந்த பாடல், கலைஞர் சாரா ரமன் (Sara Raman) அவர்களால் பாடப்பட்டு, ஆர்கே ஸ்டூடியோ (RK Studio) தயாரிப்பில் வெளியாகிறது. மனமார்ந்த நன்றியும் மரியாதையும் கலந்த இப்பாடல், டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் சமூகப்பணி மற்றும் வழிகாட்டும் பண்புகளை பாராட்டுகிறது.
இசையமைப்பு: சாரா ரமன்
கிதார்: லோகஸ் பிளாக் ஐஸ் (Loges Black Eyes)
பாடல் வரிகள் & பாடகர்: சாரா ரமன்
பதிவு: ஆர்கே ஸ்டூடியோ
மிக்சிங் & மாஸ்டரிங்: ஆர்கே ஸ்டூடியோ
போஸ்டர் வடிவமைப்பு: ஜேடிசி ராப் டவுன் புரொடக்ஷன்ஸ் (JAYDC RAPTOWN PRODUCTIONS)
சாரா ரமனின் இனிமையான குரலும், லோகஸின் இசைத்திறனும் இணைந்து, “DSMS” பாடலை மனதை நெகிழ வைக்கும் இசைப்பயணமாக மாற்றுகின்றன. சமூகத்திற்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் டாக்டர் எம். சரவணனின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.





