செரம்பான், 07 அக்டோபர் 2025 : நெகிரி செம்பிலான் பந்தார் ஸ்ரீ செந்டாயன் தமிழ்ப்பள்ளியில் பயிலும் 8 வயது சிறுவன் வசந்த் அபிநந்தன் வசந்தகுமரன், அரிய திறமை மற்றும் மனவலிமையுடன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவர் ஆணி பதகை “நெயில் ஸ்லிப்பர்” அணிந்து தொடர்ந்து 10 நிமிடங்கள் கராத்தே கத்தா (Karate Kata) அசைவுகளை திறம்பட செய்து, மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம் பெற்றுள்ளார்.
இந்த சாதனை, சிறுவர்களில் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
வசந்த் அபிநந்தனின் இந்த பெருமைக்காக அவரது பெற்றோரும், ஆசிரியர்களும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
மலேசிய சாதனைப் புத்தக அதிகாரிகள், “இளம் வயதிலேயே இத்தகைய துணிச்சலும் திறமையும் காட்டுவது மிகுந்த பாராட்டுக்குரியது” என்று தெரிவித்தனர்.






