அஹமதாபாத்[இந்தியா], 02 அக்டோபர் 2025 : இந்தியா அஹமதாபாத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 01 வரை நடைபெற்ற 11வது ஆசிய நீர் விளையாட்டுக்கள் சாம்பியன்ஷிப்பில் மலேசியாவிற்கு நேற்று ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஆண்கள் ப்ரீஸ்டைல் போட்டியில் மலேசியாவை சேர்ந்த குய் ஹோ யேன் மூன்றாவது இடத்திற்கு வந்து வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். சீன வீரர் முதல் இடத்தையும் வியட்நாம் வீரர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். குய் ஹோ 3:52.69 நிமிடத்தில் வெற்றி இலக்கை எட்டினார்.





